சட்டம் படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் பணி

Wednesday 17 April 2013 0 comments

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Hindustan Aeronautics Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainees(Legal) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainees(Legal)
மொத்த காலியிடங்கள்: 15
சம்பளம்: ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 28க்குள் இருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
 கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் 5 வருட ஒருங்கிணைந்த சட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு இளங்கலை பட்டப்படிப்புடன் B.L பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் கொள்குறி வகை எழுத்து தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.400 எஸ்சி, எஸ்டி, மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. விண்ணப்பக்கட்டணத்தை எஸ்பிஐ வங்கியின் ஏதாவதொரு கிளையில் HAL நிறுவன கணக்கு எண்: 30969511830ல் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2013
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 18.05.2013, 19.05.2013
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: 11.06.2013
பயிற்சி தொடங்கும் நாள்: 28.06.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 comments:

Post a Comment

 

©Copyright 2013 . | TZRONLINE