தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து அதிகாரிகளாக வாய்ப்பு

Monday 7 January 2013 0 comments
புனேவில் செயல்பட்டு வரும் NDA எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில்
சேர்ந்து அதிகாரிகளாக விரும்பும் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NDA-வில் காலியாக உள்ள 335 இடங்களில் ராணுவ பிரிவின் கீழ் 195 இடங்களும்,
கடற்படையின் கீழ் 35 இடங்களும், விமானப்படையின் கீழ் 66 இடங்களும்
ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேரும் மாணவர்களுக்கு 3
ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் முடிவில் அவர்களது படிப்பிற்கு ஏற்ப பி.ஏ. அல்லது பி.எஸ்சி
பட்டங்கள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் சார்பில் வழங்கப்படும். இதே
போல நேவல் அகாடமியில் சேரும் மாணவ்ர்கள் 4 ஆண்டுகள் பி.டெக் படிப்பில்
சேர்க்கப்படுவார்கள். படிப்புக் காலம் முடிந்தவுடன் கடற்படையில் காலியாக
இருக்கும் எக்ஸிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவு பணிகளில்
சேர்க்கப்படுவர்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பயில தேவையான தகுதிகள்:

அனைத்து பிரிவுகளுக்கும் நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியமாகும்.
ராணுவத்தில் சேர்ந்து பயில ஏதேனும் ஒரு பிரிவில் 12-ம் வகுப்பில்
தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். கடற்படை மற்றும் விமானப்படைக்கு
12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளை எடுத்து
படித்திருக்க வேண்டும். தற்போது 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும்
நுழைவுத் தேர்வை எழுதலாம்.

விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள்
மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த படிப்புகளில் சேர உடல் தகுதியும்
அவசியம். விண்ணப்பத்தில் என்.டி.ஏ அல்லது NAVAL அகாடமி என்று எதில் சேர
விரும்புகிறோமோ அதனை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

முப்படைகளில் சேர நுழைவுத் தேர்வு:

அனைத்து பிரிவுகளுக்கும் நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம்

ராணுவம்: ஏதேனும் ஒரு பிரிவில் 12-ம் வகுப்பு தேர்ச்சி

கடற்படை மற்றும் விமானப்படைக்கு: 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய
பாடப் பிரிவுகளை எடுத்து படித்தவர்கள்

தற்போது 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தகுதிகள்: இந்திய குடிமகன், திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

ராணுவ அகாடமியின் படிப்புகளில் சேர உடல் தகுதியும் அவசியம்

விண்ணப்பத்தில் என்.டி.ஏ அல்லது நேவல் அகாடமி என்று எதில் சேர
விரும்புகிறோமோ அதனை குறிப்பிட வேண்டும்

தேசிய பாதுகாப்பு அகாடமி வழங்கும் நுழைவுத் தேர்வு முறைகள்:

நுழைவுத் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது

முதல் தாள்: கணிதம், இரண்டாம் தாள்: ஜெனரல் எபிலிட்டி கேள்விகள்

கொள்குறி முறையில் கேள்விகள், தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள்
வழங்கப்படும்

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 14-ம் தேதி

ராணுவ படிப்பிற்கான தேர்வு முறைகள்:

நுழைவுத் தேர்விற்கு பின்னர் நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, சீருடை, புத்தகங்கள்
அனைத்தும் இலவசம்

இணைய வழியாக மட்டுமே விண்ணபிக்க முடியும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து
அனுப்ப கடைசி நாள்: ஜனவரி 21-ம் தேதி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு
விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு

மேலும் விவரங்களுக்கு: www.upsconline.nic.in

0 comments:

Post a Comment

 

©Copyright 2013 . | TZRONLINE