சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 3,196 காலியிடங்கள்

Monday 7 January 2013 0 comments


மத்திய அரசின் பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில்
காலியாக உள்ள உதவி மேலாளர், இணை மேலாளர் பணியிடங்களுக்கான 3,196
காலியிடங்களுக்கு ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்
தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து
பகுதிகளிலும் பணி அமர்த்தப்படுவர். வங்கிப் பணியாளர்களுக்கான IBPS
தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க இயலும்.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத்
தேவையான தகுதிகள்:

வயது வரம்பு 18 முதல் 28 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு
பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது வங்கியியல் பிரிவில்
பட்டயப் படிப்பை முடித்தவர்கள் அல்லது 12-ம் வகுப்பு முடித்தவர்கள்
விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்வு செய்யப்படும் நபருக்கு 6 மாதங்கள்
பயிற்சி அளிக்கப்படும்.

வங்கிப் பணியாளர்களுக்கான IBPS தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்காணலுக்கு
அழைக்கப்படுவர். நேர்காணல் சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 15
நகரங்களில் நடைபெறும்.

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:

www.centralbankofindia.co.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக்
கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் 100 ரூபாயும்,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 20
ரூபாயும் செலுத்தினால் போதுமானது.

இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் வரும் ஜனவரி 7-ம் தேதி ஆகும்.
மேலும் விபரங்களுக்கு www.centralbankofindia.co.in என்ற இணைய தளத்தைக்
காணலாம்.

0 comments:

Post a Comment

 

©Copyright 2013 . | TZRONLINE