ஊட்டியில் ராணுவ ஆள் சேர்க்கை முகாம்

Monday 7 January 2013 0 comments
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஜனவரி 7-ம்
தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மலைப்பகுதி திட்ட மைதானத்தில் இந்த ஆள் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
12-ம் வகுப்பில் ஆங்கிலம், உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும்
கணிதப் பாடங்களை பயின்றவர்களும், பட்டதாரி இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 17 முதல் 23 வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படை
வீரர், நர்சிங் அசிஸ்டண்ட், எழுத்தர், ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிகளுக்கு
ஆள் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிப்பவர் ஜனவரி காலை 7-ம் தேதி காலை 5.30 மணியளவில் ஊட்டி
மலைப்பகுதி மேம்ப்பாட்டு திட்ட திறந்த வெளி மைதானத்திற்கு வர வேண்டும்.
முகாமிற்கு வரும் போது அனைத்து கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் இரண்டு
நகல்களை சான்றொப்பங்களுடன் கொண்டு வர வேண்டும். இந்த முகாம் தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர் கொண்டு வரும் இருப்பிட
சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும்
கல்வி அலுவலர்கள் சரிபார்ப்பர். தேவையான மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெறுபவர்களுக்கு உடற் தகுதித் தேர்வு நடைபெறும்.

0 comments:

Post a Comment

 

©Copyright 2013 . | TZRONLINE