CIPET நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி

Wednesday 30 January 2013 0 comments
மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகமான CIPET நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
I.T.I மெஷினிஸ்ட், பிட்டர், டர்னர், எலக்ட்ரீஷியன் முடித்தவர்களும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில், வேலைக்கு சேர விரும்புபவர்கள், பிப்ரவரி ஒன்றாம் தேதி நேர் காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணல் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.
சிப்பெட், திரு.வி.க, தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரியில் நேர்காணல் நடைபெறுகிறது. தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள், 044-222 54701 அல்லது 044-222 54706. மின்னஞ்சல் முகவரி cipet@et.net, இணையதள முகவரி, www.cipet.gov.in.

0 comments:

Post a Comment

 

©Copyright 2013 . | TZRONLINE